மேலும்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை116  வாக்குகளால் தோல்வி

சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 116  பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

இன்று முற்பகல்  முதல் மாலை வரை இடம்பெற்ற விவாதத்தை அடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 152 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும், 36  உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது இலங்கை தமிழ்  அரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் சில  உறுப்பினர்களும்  சபையில் இருக்கவில்லை.

எனினும்,  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *