மேலும்

வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் நீடிப்பு – வாக்களிக்காமல் விலகிய சிறிலங்கா

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீடிப்பது தொடர்பது தொடர்பாக, ஐ.நா. பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சிறிலங்கா வாக்களிக்காமல் விலகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலத்தை நீடிப்பது குறித்து ஐ.நா பொதுச்சபையில் நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில்  சீனா உள்ளிட்ட 144 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததன் மூலம்,  வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக, ஆஜென்ரீனா, புர்கினா பாசோ, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, இஸ்ரேல், மாலி, நிக்கரகுவா, நைஜர், ரஷ்யா, டிரினிடாட் மற்றும் டுபாகோ மற்றும் அமெரிக்கா ஆகிய பத்து நாடுகள் வாக்களித்தன.

சிறிலங்கா, பெலாரஸ், ​​டொமினிகன் குடியரசு, ஈக்வடோர், கயானா, ஈராக், நியூசிலாந்து, பரகுவே, பெரு, கொரியக் குடியரசு, தென்சூடான், சுரினாம் மற்றும் உகாண்டா ஆகிய 13 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *