பிரித்தானிய அரசாங்கத்தில் இணை அமைச்சராக உமா குமரன் நியமனம்
பிரித்தானியாவின் புதிய அரசாங்கத்தில் நாடாளுமன்ற இணை அமைச்சராக ஈழத் தமிழரான உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற அன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை நியமித்திருந்த நிலையில், இணை அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எட் மில்லிபான்டின் கீழ், நாடாளுமன்ற இணை அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய வரலாற்றில் ஈழத் தமிழர் ஒருவர் அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
