உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விஜித ஹேரத்துடன் செர்ஜியோ கோர் கலந்துரையாடல்
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவரும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான சிறப்புத் தூதுவருமான செர்ஜியோ கோர், தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில் அவர், இந்தச் சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாகவும், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலையான பொருளாதார வழித்தடங்கள் தொடர்பாக அமெரிக்கா-சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்தியத்தில் உறுதித்தன்மையை நிலைநிறுத்துவதற்காக எங்கள் பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றும், செர்ஜியோ கோர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

