புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்
பல பத்தாண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு புதிய மாற்றுச் சட்டத்தை இறுதி செய்துள்ளது.
இந்த வரைவு, அமைச்சரவைக்கும் பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டு, விரைவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்றி அரசிதழில் வெளியிடுவதற்கான இறுதித் தயாரிப்புப் பணிகள் இடம்பெறுகின்றன.
46 ஆண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நாங்கள் ரத்து செய்து, மக்கள் நலன் சார்ந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வரும் மாதங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.
பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் மூலம் பிணை கோரி விண்ணப்பிக்க முடியும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
