கொழும்பு வந்தார் அவுஸ்ரேலியப் பிரதமர் – சிறிலங்கா அதிபருடன் சந்திப்பு
அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் குறுகிய நேரப் பயணமாக இன்று காலை சிறிலங்கா வந்துள்ளார். இஸ்ரேலுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் வழியிலேயே இன்று காலை அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்கா வந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் இன்று காலை கொழும்பு வந்து, சற்று முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகவும், இருதரப்பு உறவுகளில் முக்கியமானதொரு முன்னேற்றம் என்றும் சிறிலங்கா அதிபர் கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேசவுள்ள அவுஸ்ரேலியப் பிரதமர் ரேன்புல், இன்று மதியமே, புறப்பட்டுச் செல்லவுள்ளார்.