மேலும்

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு – தனது தவறை ஒப்புக்கொண்டார் மைத்திரி

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாடுகளுக்காக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குவதற்கு முன்னதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அனுமதியைப் பெறத் தவறியமைக்கான பொறுப்பை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிரான இரண்டு வழக்குகள் குறித்து, நீதி அமைச்சின் அனுமதியைப் பெறுமாறு அதிபர் செயலகத்தின் சட்டப் பிரிவு ஆலோசனை வழங்கியிருந்ததாகவும், ஆனால் உரிய கோப்புகள் அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்படாமல், தனது கையொப்பம் மட்டுமே பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, குறித்த அமைச்சின் அனுமதி பெறப்படாமல், எனது கையொப்பம் மட்டுமே பெறப்பட்டது. இது எனது தரப்பில் ஏற்பட்ட ஒரு தவறு என்றும் சிறிசேன தெரிவித்தார்.

ஞானசார தேரரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட தொழில்நுட்பக் குறைபாடு குறித்து, இணையத்தில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் நகலை ஆய்வு செய்த பின்னரும், பௌத்த பிக்குகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து வந்த வினாக்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், இந்த விளக்கத்தை அளிப்பதாக  சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கூறினார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறிய முன்னாள் அதிபர், தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற இந்தத் தவறுக்காக மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *