மேலும்

மாதம்: October 2026

சவுதி அரேபிய சிறையில் அனோஜன் மீது தாக்குதல் – உயிருக்கு ஆபத்து என அச்சம்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பயங்கரவாத தடுப்பு சட்டத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஆபத்து

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம், சிறுபான்மை சமூகங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படும் கடுமையான அபாயத்தை உருவாக்கும் என சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு (OMCT) எச்சரித்துள்ளது.

கடத்தல் சம்பவம் குறித்து கருணாவிடம் சிஐடி நீண்ட விசாரணை

கருணா  எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம்,  கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பாக, சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

திலீபன் சிலை அகற்றப்பட்ட விவகாரம்- தேசிய சமாதானப் பேரவை எச்சரிக்கை

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும், யாழ்ப்பாணத்தில் திலீபன் சிலை அகற்றப்பட்டதும்  ஒட்டுமொத்த சமூகங்களையும் பாதிக்கும் குறைகளாக மாறும் அபாயத்தைக் கொண்டுள்ளன என்றும் தேசிய சமாதானப் பேரவை எச்சரித்துள்ளது.

முதல் 8 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 61.6 சதவீதம் அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சிறிலங்காவின் எரிபொருள் இறக்குமதிக்கான மொத்த செலவினம், 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ஆண்டுக்கு ஆண்டு 61.6 சதவீதம் அதிகரித்து, 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

ஈரானிய கப்பல்கள் குறித்து அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை- விஜித ஹேரத்

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள அனைத்துலக கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஈரானிய கப்பல்களுக்கு பொருட்களை வழங்குவது தொடர்பாக, சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மறுத்துள்ளார்.

அனோஜன் விடுதலைக்கு மேன்முறையீடு செய்ய நாளை சவூதி செல்கிறது நால்வர் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவணத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்து விட்டதாக, அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடாலயத்தில் பதுங்கியிருந்த ஞானசார தேரர் கைது

களுத்துறை, தீனியாவல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனயத்தில் பதுங்கியிருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க எச்சரிக்கை குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு விளக்கம்

சிறிலங்காவுக்கு அருகிலுள்ள அனைத்துலக கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கினால், சிறிலங்காவுக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகும் தகவல்கள் குறித்து, வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது. 

சிறிலங்காவின் அடுத்த தலைமுறை இராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் வோவெல், சிறிலங்காவின் அடுத்த தலைமுறை இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.