மேலும்

மடாலயத்தில் பதுங்கியிருந்த ஞானசார தேரர் கைது

களுத்துறை, தீனியாவல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனயத்தில் பதுங்கியிருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வழக்குகளில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றமும், கொழும்பு மேல்நீதிமன்றமும், ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தன.

தேடப்பட்டு வந்த அவர், மடாலயத்தில்  பதுங்கியிருந்த நிலையில் கொழும்பு குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *