மேலும்

நாள்: 10th October 2026

கறுப்பு ஜூலை குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு- சபாநாயகரிடம் முன்மொழிவு

கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமிக்கக் கோரி, ஆளும்கட்சியின் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

கப்பல்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா தட்டிக்கழிக்க முடியாது – ஈரானிய தூதுவர்

அனைத்துலக உடன்பாடுகளில் கையெழுத்திட்ட ஐ.நா உறுப்பு நாடு என்ற வகையில், தனது தனித்துவ பொருளாதார வலயத்தில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்குத் தேவையானதை வழங்குவதிலிருந்து சிறிலங்கா விலகிக்கொள்ள முடியாது என  ஈரானியத் தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

‘கறுப்பு ஜூலை’க்காக தமிழர்களிடம் மன்னிப்புக் கோரினார் சஜித் பிரேமதாச

1983 ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினரிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில்  நேற்று மன்னிப்பும் கோரியுள்ளார்.

அதிபர் விசாரணை ஆணைக்குழு வேண்டாம்- நாடாளுமன்ற தெரிவுக் குழுவே நல்லதாம்

‘கறுப்பு ஜூலை’ சம்பவங்களை விசாரிப்பதற்கு அதிபர் ஆணைக்குழுவை அமைப்பதை விட, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை  அமைப்பதே, பயனுள்ளதாக இருக்கும் என்று சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

‘கறுப்பு ஜூலை’ குறித்த உண்மையைக் கண்டறிய அதிபர் ஆணைக்குழு

1983-ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’யின் போது நிகழ்ந்த இன வன்முறைகள் குறித்த உண்மையைக் கண்டறிய, அதிபர் ஆணைக்குழுவொன்றை நியமிக்க கோரும் தனிநபர் தீர்மானத்தை,  ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்வைத்துள்ளார்.