மேலும்

மாதம்: October 2026

ஈரானிய கப்பல்களுக்கு விநியோகம்- சிறிலங்கா கப்பல்களுக்கு அமெரிக்கா தடை

சிறிலங்காவின் தனித்துவ பொருளாதார வலயத்தில் நங்கூரமிட்டிருந்த ஈரானியக் கப்பல்களுக்கு எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கிய நிறுவனங்களின் இரண்டு சிறிலங்கா  கப்பல்கள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுரேஷ் சாலேயின் மருத்துவ அறிக்கையை தயாரித்த 10 மருத்துவர்களுக்கும் அழைப்பாணை

சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயை பரிசோதித்த மருத்துவக் குழுவில் இடம்பெற்ற 10 மருத்துவர்களையும், எதிர்வரும் 6 ஆம் நாள் நீதிமன்றில் முன்னிலையாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம்  அழைப்பாணை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் அரசு சாரா நிறுவனங்கள் சட்டமூலம் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் கவலை

சிறிலங்கா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள ‘அரசு சாரா நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டமூலம் 2026’-ன் சில விதிகள் குறித்து, மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில் பணியாற்றும் ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர்கள் , கவலை தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை – வெளிநாடு செல்லவும் தடை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

டீசலுக்கு மானியம் வழங்கியும் நட்டம்- என்கிறது பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்த நிலையில், டீசலுக்கு ஒரு லீற்றருக்கு 70 ரூபா மானியம் வழங்கப்பட்ட நிலையிலும்,  தொடர்ந்து நட்டத்தைச் சந்தித்து வருவதாக சிறிலங்கா பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.

பயங்கரவாத குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலமே கையாளப்பட வேண்டும்

1979ஆம் ஆண்டின் 48-ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்,  பயங்கரவாதம் தொடர்பான குற்றங்கள் பொதுச் சட்டத்தின் மூலம் கையாளப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான், சிறிலங்கா இடையே மூலோபாய ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாடு

பாகிஸ்தானுடன் சிறிலங்கா மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி புரிந்துணர்வு உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது.

ரில்வின் சில்வாவுடன் ஜெய்சங்கர், நிதின் நபின் சந்திப்பு

இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த ஜேவிபியின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி உயர்மட்டக் குழுவினர் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய கோட்டாவின் ரிட் மனு தள்ளுபடி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதையும், தடுத்து வைப்பதையும் தடுக்கும்படி கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க தளபதி பேச்சு

அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் “ஜேபி” வோவல், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  ஆகியோரை ​​தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.