மேலும்

கடத்தல் சம்பவம் குறித்து கருணாவிடம் சிஐடி நீண்ட விசாரணை

கருணா  எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம்,  கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பாக, சிறிலங்கா காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடத்தல் சம்பவம் ஒன்று தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக வாக்குமூலம் பெறுவதற்காக,  இன்று காலை கருணா  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று நாள் முழுவதும் புலனாய்வாளர்களால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று மாலை குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்தை விட்டு கருணா வெளியேறினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *