சிறிலங்காவின் அடுத்த தலைமுறை இராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்க தளபதி சந்திப்பு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் வோவெல், சிறிலங்காவின் அடுத்த தலைமுறை இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்காவின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மற்றும் வளர்ந்து வரும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் வோவெல் உரையாற்றினார்.
இராணுவத்தை நவீனமயப்படுத்தல், தலைமைத்துவம் மற்றும் வலுவான தொழில்முறை இராணுவ உறவுகள் எவ்வாறு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தயார்நிலையை மேம்படுத்தி, கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்பது குறித்தும் அவர், சிறிலங்காவின் இளம் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
