எரிபொருள் விலைகள் நள்ளிரவில் உயர்ந்தன
நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி, ‘ஓட்டோ டீசல்’ விலை ஒரு லீற்றருக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 392 ரூபாவாக விற்கப்படும்.
‘சூப்பர் டீசல்’ விலை ஒரு லீற்றருக்கு 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ‘ 92 ஒக்டேன்’ பெட்ரோல் விலை ஒரு லீற்றருக்கு 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாக விற்கப்படும்.
எனினும், ’95 ஒக்டேன்’ பெட்ரோல், விலை ஒரு லீற்றருக்கு 475 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் விலை ஒரு லீற்றருக்கு 285 ரூபாவாகவும் – எந்த விலை விற்கப்படும் எனவும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
