திலீபன் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக திருமலையில் போராட்டத்திற்கு அழைப்பு
நல்லூரில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5.00 மணியளவில், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பொது மக்கள், இளைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் அனைவரையும் கலந்து கொண்டு இந்த கண்டனப் போராட்டத்தை வலுப்படுத்துமாறு, திருக்கோணமலை மாவட்ட சுயாதீன செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

