மேலும்

Tag Archives: திருக்கோணமலை

இன்றைய சாதகமான சூழலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – இரா.சம்பந்தன்

அனைத்துலக சமூகமும், சிறிலங்கா அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையை, நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் மீண்டும் பூச்சிய நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருமலை கடற்பரப்பில் இந்திய- சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் போர்ப்பயிற்சி

திருக்கோணமலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து நேற்றுக்காலை பாரிய போர்ப்பயிற்சி ஒன்றில் ஈடுபட்டன.

கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ரஸ்யக் கடற்படைக் கப்பல்கள்

ரஸ்யக் கடற்படையின் பசுபிக் கப்பல் படைப்பிரிவைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன. அட்மிரல் பன்ரெலீவ், பெசெங்கா, எஸ்.பி-522 ஆகிய கப்பல்களே, கடந்த 28ம் நாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளன.

சம்பூரில் ஏப்ரல் இறுதிக்குள் 579 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் – ஒஸ்ரின் பெர்னான்டோ

திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள சம்பூரில், இருந்து இடம்பெயர்ந்த 579 குடும்பங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியர்த்தப்படுவர் என்று கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

திருக்கோணமலைத் துறைமுகத்தில் 4 இந்தியக் கடற்படைக் கப்பல்கள்

இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் நான்கு கப்பல்கள் நேற்று திருக்கோணமலைத் துறைமுகத்துக்கு பயிற்சிக்காக வந்துள்ளன.

திருகோணமலையில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

மறைந்த கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு, திருக்கோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. ‘நினைவுகளில் கி.பி.அரவிந்தன்’ என்னும் தலைப்பில்,’நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில்  இந்த நிகழ்வு இடம்பெற்றது.

13ஆவது திருத்தத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் – கொழும்பில் மோடி

சிறிலங்காவில் தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமஉரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டத்தை விரைவாக நடைமுறைப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  வலியுறுத்தியுள்ளார்.