மேலும்

Tag Archives: ஈஸ்டர் ஞாயிறு

செப்ரெம்பர் 22இல் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 25 சந்தேநபர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக, செப்டம்பர் 22 ஆம் நாள் தீர்ப்பளிக்கவுள்ளதாக  கொழும்பு நிரந்தர நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தயார் – என்கிறார் அனுர

தேவைப்பட்டால் பதவியை விட்டு விலகவும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

விமல், உதய, திலித் உள்ளிட்ட 6 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

கோட்டாவின் ரிட் மனு தொடர்பாக செப்ரெம்பர் 22இல் தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி,  முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் நாள் அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும் மரணதண்டனை

புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்திருந்தும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை  தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத  சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுவதை தடுக்க கோரும் கோட்டாவின் மனு- பரிசீலனை ஒத்திவைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வது மற்றும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான  மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அலைபேசி, மடிகணினி கடவுச்சொற்களை வழங்க சுரேஷ் சாலேக்கு நீதிமன்றம் உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, தனது அலைபேசி, மற்றும் கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுரேஷ் சாலே தகவல்களை மறைக்காமல் வெளிப்படுத்தி ஒத்துழைக்க வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடைபெற்று வரும் விசாரணைகளுக்கு சுரேஷ் சாலே தன்னிடம் உள்ள அனைத்து தொடர்புடைய தகவல்களையும் வெளிப்படுத்தி முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.

கைதில் இருந்து தப்ப நீதிமன்றுக்கு ஓடும் சிறிலங்காவின் முன்னாள் படைத் தளபதிகள்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்கா இராணுவ மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இரண்டு பேர்  மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

சுரேஷ் சாலேவுக்கு உளவியல் பாதிப்பு – உயிரை மாய்க்கும் ஆபத்து உள்ளதாம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே, அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு , பதற்றம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அவரது  சட்டவாளர் தெரிவித்துள்ளார்.