சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் 6 மணிநேரம் விசாரணை
சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று 6 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று 6 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பாக, தாம் கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி, முன்னாள் சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு செப்ரெம்பர் 22 ஆம் நாள் அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வது மற்றும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு தடை விதிக்கக் கோரி சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப் புலனாய்வுப்பிரிவு தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற போது, ஏற்பட்ட செலவுகள் மற்றும் தகவல்களை மறைப்பதற்கு சிறிலங்கா கடற்படை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் முன்பாக, இன்று முன்னிலையாகியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபரான பின்னர், கோட்டாபய ராஜபக்ச சிறிலங்கா அதிபரானார். அனுரகுமார திசாநாயக்க அதிபரான பின்னர், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபரானார்.