மேலும்

சிறிலங்கா நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக,  எதிர்க்கட்சி  நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூலை 5 மற்றும் 6 ஆம் நாள்களில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் பெரும் எண்ணிக்கையிலான சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய நீதி அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *