மேலும்

நாள்: 24th September 2025

ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலருடனும் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா  பொதுச்சபையின் 80வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்துப் பேசியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஜெனிவாவில் நாளை மறுநாள் மீளாய்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின், சிறிலங்கா குறித்த கால மீளாய்வு அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

மாகாணசபை தேர்தலுக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்- சந்தோஷ் ஜாவிடம் கோரிக்கை

மாகாணசபைகளுக்கான தேர்தலை  உடனடியாக நடத்துவதற்கு  சிறிலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா உரிய அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

காணிகள் விடுவிப்பு குறித்து வடக்கு ஆளுநரிடம் அமெரிக்க அதிகாரி கேள்வி

அமெரிக்க தூதரகத்தின் தலைமை அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரி, அந்தோனி பிர்நொட் (Anthony Pirnot) வடக்கு மாகாணத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி, சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் கையொப்பங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு

அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி, அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள்,  சிறிலங்காவுக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே பிரான்சேயிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவை சென்றடைந்தார் அனுர- ஐ.நாவில் இன்று உரையாற்றுவார்

ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.