அமெரிக்காவை சென்றடைந்தார் அனுர- ஐ.நாவில் இன்று உரையாற்றுவார்
ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க அமெரிக்காவைச் சென்றடைந்துள்ளார்.
அமெரிக்க நேரப்படி நேற்று காலை 8.50 மணியளவில் அவர் நியூயோர்க் ஜோன் எவ் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
அவருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தும் அமெரிக்காவிற்குச் சென்றள்ளார்.
அவர்களை விமான நிலையத்தில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான முன்னாள் தலைமை நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் சிறிலங்கா அதிகாரிகள் வரவேற்றனர்.
ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அதிபர் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் ( உள்ளூர் நேரப்படி) உரையாற்றவுள்ளார்.