மேலும்

நாள்: 6th September 2025

அமெரிக்க அழுத்தங்களால் சீனாவின் அழைப்பை நிராகரித்த சிறிலங்கா

சீனாவின் தியான்ஜினில் (Tianjin) நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள, சீனா விடுத்த அழைப்பை சிறிலங்கா நிராகரித்ததாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷங்காய் மாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது பெரும் தவறு

சீனாவில் நடந்தத ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், உச்சிமாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது ஒரு தவறான தீர்மானம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு அழைப்பு – பதறும் போர்க்குற்றவாளிகள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அங்கீகரிக்கும் ரோம் சட்டத்தில் கையெழுத்திடுமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பான நிலைப்பாட்டை, நாடாளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வெளிப்படுத்த வேண்டும் என, முன்னாள் கடற்படைப் பேச்சாளர் றியர் அட்மிரல் டிகேபி தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நாவின் பரிந்துரையை நிராகரித்தது சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்  அண்மைய அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச தலையீடுகளுக்கான கோரிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.