வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு
2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.