மேலும்

மாதம்: August 2025

சோமரத்ன ராஜபக்சவை விசாரிப்பது சிக்கலை ஏற்படுத்துமாம்

கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில்,  அது குறித்து விசாரணை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என,  முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

சோமரத்னவின் கடிதம்- தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

செம்மணிப் புதைகுழிகள் பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராவுள்ளதாக சோமரத்ன ராஜபக்ச கூறியுள்ள நிலையில், அதற்குரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபரும், சர்வதேச சமூகமும் முன்னெடுக்க வேண்டும் என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

செம்மணியில் இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க முன்வந்தார் சோமரத்ன ராஜபக்ச

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக, மரணதண்டனைக் கைதியான சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2000 அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு – இணங்கியது சிறிலங்கா

சிறிலங்கா பொருட்களுக்கான பரஸ்பர வரியை அமெரிக்கா 20 சதவீதமாகக் குறைத்துள்ளதற்கு ஈடாக, அமெரிக்காவிற்கு பரந்தளவிலான சலுகைகளை வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் முதல் முறை

சிறிலங்காவின் நீதித்துறை வரலாற்றில் முதல்முறையாக, மனிதப் புதைகுழியொன்றில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அடுத்த இரண்டு வாரங்களில் அதன் பணிகளை முடிக்கும் என  குழுவின்  தலைவர் ரியன்சி அரசகுலரத்ன,தெரிவித்துள்ளார்.

செம்மணியில் இன்றுவரை 126 எலும்புக்கூட்டுகள் அடையாளம்

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஜெனிவாவுக்கான கடிதத்தில் ஒப்பமிட தமிழ் அரசுக் கட்சி மறுப்பு

பொறுப்புக்கூறல் விடயம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் ஒப்பமிடுவதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மறுப்புத் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கான வரியை 20 வீதமாக குறைத்தார் ட்ரம்ப்

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 20 சதவீதமாக குறைத்துள்ளார்.