சோமரத்ன ராஜபக்சவை விசாரிப்பது சிக்கலை ஏற்படுத்துமாம்
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என, முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.
மரண தண்டனை கைதியான சோமரத்ன ராஜபக்ச, சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்கத் தயார் என்று, அவரது மனைவி சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
கிருஷாந்தி படுகொலை வழக்கில் சோமரத்ன ராஜபக்ச உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினர் குற்றம் புரிந்திருப்பார்களாயின் அவர்களுக்கு உள்ளக நீதிகட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
முறையான விசாரணைகளின் பிரகாரமே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரத்தை அதிபர் ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கலை ஏற்படுத்தும்.
சர்வதேச விசாரணையில் சாட்சியமளிக்க சோமரத்ன ராஜபக்ச தயாராகவுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் உள்ளக நீதி கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.
சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்று எதிர்பார்த்துள்ளோம் என்றும், சரத் வீரசேகர மேலும் தெரிவித்துள்ளார்.