இரண்டு வாரங்களில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அடுத்த இரண்டு வாரங்களில் அதன் பணிகளை முடிக்கும் என குழுவின் தலைவர் ரியன்சி அரசகுலரத்ன,தெரிவித்துள்ளார்.
தற்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவின் இறுதி இரண்டு அத்தியாயங்களை மீளாய்வுக் குழு மதிப்பீடு செய்து வருகிறது.
எனவே அடுத்த இரண்டு வாரங்களில் தேவையான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
நாங்கள் தேவையான சேர்த்தல்களைச் செய்வோம், அதன் பின்னர் சட்டமூலத்தை பொதுமக்களின் ஆலோசனைகளுக்கு கிடைக்கச் செய்வோம்.
புதிய சட்டமூலம் நாட்டின் நீண்டகால பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றும் நோக்கம் கொண்டது.
புதிய சட்டம் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் திருத்தங்களை உள்ளடக்கியது.
இருப்பினும், பொதுமக்களின் கருத்துக்களை சேர்த்துக் கொள்வதற்கான காலம் குறுகியதாக இருக்கும்.
சட்டமூலத்தை அவசரமாக நிறைவேற்ற வேண்டியிருப்பதால், பொது ஆலோசனைகளை நீண்ட காலத்திற்கு நீடிக்க முடியாது,” என்றும் குழுவின் தலைவர் ரியன்சி அரசகுலரத்ன, தெரிவித்துள்ளார்.
செப்ரெம்பர் மாதத்திற்குள் முழு செயல்முறையையும் இறுதி செய்வதே தமது குழுவின் இலக்கு என்றும், அவர் கூறியுள்ளார்.