அமெரிக்காவுடன் சிறிலங்கா பேச்சு – வரிக் குறைப்புக் குறித்து தகவல் இல்லை
சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டாவது சுற்று வர்த்தகப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
நேற்று முன்தினம் வொசிங்டனில் இந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகியிருந்தன.
சிறிலங்காவில் இருந்து சென்ற உயர்மட்டக் குழுவும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பணியக அதிகாரிகளுக்கும் இடையில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் போது, அமெரிக்காவினால் சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.