மேலும்

208 ஈரானிய மாலுமிகளும் போர்க்கப்பலில் இருந்து மீட்பு

ஈரானின் ஐஆர்ஐஎஸ் புஷேர் போர்க்கப்பலில் இருந்த 208 மாலுமிகளும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகே காணப்பட்ட ஈரானிய போர்க்கப்பலில் இருந்த மாலுமிகளை கொழும்பில் தரையிறக்கவும், கப்பலை திருகோணமலைக்கு கொண்டு செல்லவும் தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அதிகாலை ஈரானிய கப்பலில் இருந்த மாலுமிகளை வெளியேற்றும் நடவடிக்கையை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டது.

இதையடுத்து, 208 மாலுமிகளும் சிறிலங்கா கடற்படைப் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அவர்களை மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், வெலிசற கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *