சிறிலங்கா காவல்துறையில் சிறப்பு உந்துருளி அணி
சிறிலங்கா காவல்துறை தென் மாகாணத்தில் சிறப்பு உந்துருளி அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் கீத்சிறி ஜெயலத் தலைமையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த உந்துருளி அணி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவாகச் செயற்படக் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டுத் தப்பிச் செல்லும் சந்தேக நபர்களை, விரைவாக கண்டறிந்து கைது செய்வதே இந்தப் பிரிவின் நோக்கமாகும்.
இந்தப் புதிய பிரிவில் 23 உந்துருளிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தங்காலை மற்றும் மாத்தறை பிரிவுகளில், 46 காவல்துறை அதிகாரிகள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.