பிரதமர் பதவி, அமைச்சரவையில் மாற்றமா? – மறுக்கிறார் லால் காந்த
அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தக் கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று விவசாய அமைச்சர் லால் காந்த தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துக்குள் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவியில் இருந்து மாற்றப்படவுள்ளதாகவும், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும், சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் லால் காந்த,
அமைச்சரவையை மறுசீரமைப்பது அல்லது பிரதமரை மாற்றுவது குறித்து அரசாங்கத்திற்குள் எந்த கலந்துரையாடல்களும் நடக்கவில்லை என்றும், ஊடகங்கள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன என்றும் கூறினார்.
ஊடகங்கள் கூறுவது போன்று எந்தப் பிரச்சினைகளும் இல்லை. அரசாங்கத்தில் எந்த உள் மோதல்களும் இல்லை.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்களின் தலையை சரிபார்க்க வேண்டும் என நினைக்கிறேன்,” என்றும், லால் காந்த மேலும் தெரிவித்துள்ளார்.