பிராந்திய பதற்றங்களால் அவசரகாலச் சட்டம் நீடிப்பாம்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றங்கள் காரணமாக, வரும் வாரங்கள் சிறிலங்காவுக்கு தீர்க்கமான காலகட்டமாக இருக்கலாம் என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தாமதங்கள் ஏற்படக் கூடும்.
பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலின் விளைவாக, கடல் மற்றும் விமானப் போக்குவரத்து பாதைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த இடையூறுகள் ஏற்படக்கூடும்.
வரும் வாரங்கள் தீர்க்கமானதாக இருக்கும். அத்தியாவசிய சேவைகளை நிர்வகிப்பதில் நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த சூழலில்தான் அவசரகால நிலையை நீடிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
