மேலும்

புதுடெல்லியில் ஜெய்சங்கரை சந்தித்தார் விஜித ஹேரத்

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மஹாசாகர் மற்றும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழிநடத்தும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *