பாகிஸ்தான் கடற்படைத் தளபதியுடன் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பேச்சு
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த, பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் நவீட் அஷ்ரப்பை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான்- சிறிலங்கா பாதுகாப்புக் கலந்துரையாடலுக்காக இஸ்லாமாபாத் சென்றிருந்த போது, நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் ஜெயந்த எதிரிசிங்க, சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, சிறிலங்கா விமானப்படைத் தலைமை அதிகாரி எயர் வைஸ் மார்ஷல் லசித்த சுமணவீர ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.