சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இந்தியா பயணம்
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரைசினா கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அவர் இன்று புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளார்.
இந்தியாவில் மிலன் கூட்டுப் பயிற்சியை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல், சிறிலங்காவுக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்ற மறுநாள் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
ஈரானிய போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது.
