மேலும்

மாதம்: October 2019

அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இராணுவப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த தேர்தலாக, இந்த முறை நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனை ஆபத்தான ஒன்றாகவும், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், அரசியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் சிலரும் கருதுகிறார்கள்.

கோத்தாவை வெற்றிபெற வைக்க 850 பேர் அமெரிக்காவில் இருந்து வருகின்றனர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பு வரவுள்ளனர்.

தேசியப் பட்டியல் ஆசனத்தைப் பெறுவதற்காக டிலானிடம் கெஞ்சும் மைத்திரி

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து அடுத்த மாதம் நீங்கிய பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கான முயற்சிகளில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளார் என்று ‘சண்டே ரைம்ஸ்’ அரசியல் பத்தியில் கூறப்பட்டுள்ளது.

மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரப்பட்ட ‘அரசியலமைப்பு சதி’யின் ஓராண்டு நினைவு

சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 26ஆம் நாள் இடம்பெற்ற அரசியலமைப்புச் சதியின், முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்  நடத்தப்பட்டது.

முன்னாள் கூட்டமைப்பு எம்.பி தங்கேஸ்வரி காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமர் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் நேற்று காலமானார்.

சமூக ஊடகங்களில் தேர்தல் முடிவுகள் கசிவதை தடுக்க நடவடிக்கை

அதிகாரபூர்வ முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர், தேர்தல் முடிவுகள் சமூக ஊடகங்களில் கசிவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கோத்தாவின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் சீனத் தூதுவர்

பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வில் சீனத் தூதுவர் செங் ஷியுவானும் கலந்து கொண்டுள்ளார்.

இறுதி முடிவுக்காக நாளை மறுநாள் கூடும் ஐந்து கட்சிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட, ஐந்து தமிழ்க் கட்சிகளும், நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேசவுள்ளன.

மீறல்களில் ஈடுபட்ட படையினருக்கு விடுதலை – தேர்தல் அறிக்கையில் கோத்தா வாக்குறுதி

போரின் போது மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைத்து சிறிலங்கா படையினரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என்று, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

படையினர் பொதுமக்களை குறி வைத்ததற்கு ஆதாரம் இல்லை – ராஜித

போரின் போது சிறிலங்கா படையினர் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றனர் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று, சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.