முன்னாள் கூட்டமைப்பு எம்.பி தங்கேஸ்வரி காலமானார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தங்கேஸ்வரி கதிராமர் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் நேற்று காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார் என, தகவல்கள் கூறுகின்றன.
தொல்பொருள்துறை ஆய்வாளரும், எழுத்தாளருமான தங்கேஸ்வரி கதிராமர், 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
எனினும், 2010 நாடாளுமன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இவர் பல வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.