மேலும்

நாள்: 20th October 2019

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்த முதல் பயணி

சிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமான – யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் கடந்த 17ஆம் நாள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

பிரிகேடியர் பிரியங்கவின் விலக்குரிமையை பிரித்தானியா மதிக்க வேண்டும்- சிறிலங்கா

பிரித்தானியாவின் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு, இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும், அதனை பிரித்தானியா மதித்து நடக்க வேண்டும் என்றும் சிறிலங்கா கோரியுள்ளது.

எகிறும் அதிபர் தேர்தல் செலவு

பிளாஸ்டிக் வாக்குப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு ஆராய்ந்து வருவதால், அதிபர் தேர்தலுக்கான செலவினம் மேலும் அதிகரிக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டை பிரித்து விட்டார்களோ என சந்தேகம் கிளப்புகிறார் அதிபர் வேட்பாளர்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை ஏற்கனவே பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் தலைவரான பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கோத்தாவுடன் உடன்பாடு – மொட்டு மேடையில் ஏறமாட்டோம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும்,  புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.

இன்றிரவு ஜப்பான் புறப்படுகிறார் மைத்திரி – அதிபராக கடைசி வெளிநாட்டுப் பயணம்?

சிறிலங்காவில் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரம் பெற்றுள்ள நிலையில், இந்த தேர்தலில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்றிரவு ஜப்பானுக்குப். புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் – கொழும்பில் குவியும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள்

அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தடுமாறிய கோத்தா

ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.