மேலும்

நாள்: 21st October 2019

முகநூல் ‘உள்பெட்டி’ தகவல்களும் கண்காணிப்பு

சிறிலங்காவில் முகநூல் பயன்படுத்துனர்களால் உள்பெட்டியில் (inbox) பரிமாறப்படும் தகவல்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாக, முகநுநூல் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா

சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று, இந்தியாவின் ‘எகொனமிக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு – ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பு

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சூழலில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரை மன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் வெற்றியை உறுதிப்படுத்த முன்னாள் தளபதிகளை களமிறக்கினார் கோத்தா

யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத் தளபதிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

5 தமிழ் கட்சிகளின் ஆவணம் – ஓடி ஒளியும் அதிபர் வேட்பாளர்கள்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேசுவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து, 13 கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றை தயாரித்துள்ள நிலையில், பிரதான வேட்பாளர்கள் எவரும், பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழறுபடிகள் நடந்தால் வாக்களிப்பு ரத்து – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

அஞ்சல் வாக்குச் சீட்டு புள்ளடியிடும் மையங்களில் ஏதாவது  தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தும் முயற்சிகளோ இடம்பெற்றால், அந்த மையங்களில் இடம்பெற்ற வாக்களிப்பு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.

கூட்டமைப்பின் நிலைப்பாடு வியாழன்று வெளிவரும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் நாள் வெளியிடப்படும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தேர்தலை கண்காணிக்க 60 பேரை அனுப்புகிறது ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க, ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய கால, மற்றும் நீண்டகால அடிப்படையில்  60 கண்காணிப்பாளர்களைப் பணியில் அமர்த்தவுள்ளது.

சிறிலங்கா கடற்படையின் ‘காலி கலந்துரையாடல்’ இன்று ஆரம்பம்

சிறிலங்கா கடற்படை ஆண்டு தோறும் நடத்தும், ‘காலி கலந்துரையாடல்- 2019’ என்னும், கடல் பாதுகாப்பு மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது.