மேலும்

நாள்: 22nd October 2019

கோத்தாவுக்கு எதிரான வழக்கு – அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா விக்ரமதுங்க சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்காவின் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அடுத்த கட்டமாக திருச்சியில் இருந்து பலாலிக்கு விமான சேவை

சென்னை மற்றும் திருச்சியில் இருந்து, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்துக்குப் பறக்கும் வணிக விமானங்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதில் திருச்சியில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி  21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற தேர்தல் – பெரும் வெற்றியை நோக்கி ஹரி ஆனந்தசங்கரி

கனேடிய நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 63 வீத வாக்குகளுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக ரொறன்ரோ ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இந்திய குழுவுக்கு தேநீர் கொடுக்க மறுத்த சிறிலங்கா விமானப்படை தளபதி

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு சிறிலங்கா விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேட்பாளர்களுக்கு பின்னால் சென்று பேசத் தயாரில்லை – 31ஆம் நாளுக்கு முன் முடிவு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் பின்னால், சென்று பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்க் கட்சிகளை சந்திக்க ரணில் அழைப்பு

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.