மேலும்

நாள்: 6th October 2019

கட்டுப்பணம் செலுத்திய 41 வேட்பாளர்களின் விபரம்

அடுத்த மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, மொத்தம் 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

போட்டிக்களத்தில் நான்கு முஸ்லிம்கள், இரண்டு தமிழர்கள்

வரும் நொவம்பர் மாதம் 16ஆம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடுவதற்கு, இரண்டு தமிழ் வேட்பாளர்களும், நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நாமலின் பெயரில் கட்டுப்பணம் – மூன்று ‘ராஜபக்ச’க்களால் குழப்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்திய  ஒன்பது வேட்பாளர்களில் நாமல் ராஜபக்ச என்பவரும் அடங்கியுள்ளார்.

வேட்புமனுவில் கையெழுத்திட்டார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கோத்தாபய ராஜபக்ச இன்று முற்பகல் கையெழுத்திட்டார்.

சிவாஜிலிங்கமும் தேர்தல் களத்தில் – கட்டுப்பணம் செலுத்தினார் அனந்தி

அடுத்தமாதம் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ரெலோவின் தவிசாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கமும் இன்று கட்டுப்பணம் செலுத்தினர்.

அதிபர் தேர்தலில் போட்டியிட 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

வரும் 14ஆம் நாள் பலாலியில் தரையிறங்குகிறது அலையன்ஸ் விமானம்

எயர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் விமானம், வரும் 14ஆம் நாள் பலாலி விமான நிலையத்தில் முதலாவதாக தரையிறங்கவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மூன்றாக பிளவுபடும் நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி?

அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருப்பதை அடுத்து, கட்சி மூன்றாக பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்சவினரிடம் மைத்திரி சரணாகதி – கோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும், கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வியாங்கொட, தெனுவரவுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.