மேலும்

நாள்: 16th October 2019

பலாலியில் பரீட்சார்த்தமாக தரையிறங்கியது அலையன்ஸ் எயர் விமானம்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா நாளை நடக்கவுள்ள நிலையில், எயர் இந்தியாவின் அலையன்ஸ் எயர் விமானம் ஒன்று நேற்று பலாலி விமான நிலையத்தில் பரீட்சார்த்தமாக தரையிறக்கப்பட்டது.

ஜெனிவா தீர்மானம் சட்டவிரோதம் – ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் கோத்தா

சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதமானது என்றும், அதனை தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்றும் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராக சமன் ரத்நாயக்க

சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக, சமன் சிறி ரத்நாயக்கவை நியமிப்பதற்கு, அரசியலமைப்பு சபை அங்கீகாரம் அளித்துள்ளது.

எல்லா வேட்பாளர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பு

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் என, அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.