மேலும்

நாள்: 11th October 2019

17 ஆசனங்களைக் கைப்பற்றியது பொதுஜன பெரமுன – இறுதி முடிவு வெளியானது

எல்பிட்டிய பிரதேச சபைக்கு இன்று நடந்த தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது.

வாக்குச்சீட்டில் அடுத்தடுத்து கோத்தா, நாமலின் பெயர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில், கோத்தாபய ராஜபக்சவின் பெயரும் நாமல் ராஜபக்சவின் பெயரும் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – வட்டார ரீதியான முடிவுகள் சில

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வட்டார ரீதியாக கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் தொடர்பான அதிகாரபூர்வமற்ற சில முடிவுகள் கிடைத்துள்ளன.

சென்னையில் இருந்து பலாலிக்கு வாரத்தில் 7 விமான சேவைகள் – இந்திய அரசு அனுமதி

சென்னையில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு  வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு, எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு, இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு அமைச்சராக்குவேன் – சஜித்

தாம் ஆட்சிக்கு வந்தால், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாதுகாப்புக்குப் பொறுப்பான உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விசுவமடு கூட்டு பாலியல் வல்லுறவு – 3 சிறிலங்கா படையினரும் விடுதலை

விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று சிறிலங்கா இராணுவத்தினரை, சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து அவர்களை விடுதலை செய்துள்ளது.

சிறிலங்காவுக்கான புதிய தூதுவரின் நியமனத்தை ரத்து செய்தது பாகிஸ்தான்

சிறிலங்காவுக்கான தூதுவராக அனுப்பப்படவிருந்த முன்னாள் இராணுவ அதிகாரியின் நியமனத்தை பாகிஸ்தான் அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது.

எல்பிட்டிய தேர்தல் – இரவு 10 மணிக்குள் முடிவு

காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் – படங்கள்

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையம் அடுத்தவாரம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காலிமுகத்திடலில் பலம் காட்டிய சஜித் பிரேமதாச

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பரப்புரைப் பேரணி நேற்று கொழும்பு காலிமுகத் திடலில் இடம்பெற்றது.