மேலும்

நாள்: 14th October 2019

சிறிலங்கா அதிபர் தேர்தல் – ஐந்து தமிழ்க் கட்சிகள் பொது உடன்பாட்டில் கைச்சாத்து

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், ஆறு தமிழ்க் கட்சிகளுடன், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, பொது இணக்கப்பாட்டு ஆவணத்தில் ஐந்து கட்சிகள் இன்று கையெழுத்திட்டன.

தேர்தலில் இம்முறை அனைத்துலக தலையீடு இருக்காது – பசில்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் இம்முறை எந்தவொரு அனைத்துலக சக்தியும் தலையீடு செய்ய முயற்சிக்காது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

முதல் விமானத்தில் யாழ்ப்பாணம் வரும் இந்திய விருந்தினர்கள்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ள முதலாவது விமானத்தில், இந்தியாவில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லா, ராசிக்குடன் தொடர்பா? – மறுக்கிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லா மற்றும், இலங்கை தவ்ஹீத் ஜமாத் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்குடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்களை பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர்

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் படம் மற்றும் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ள விடயத்துடன், இராணுவத் தளபதி எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படும் சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்ட கருத்துடன் நேற்று வெளியிடப்பட்ட விளம்பரங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐதேக முறைப்பாடு செய்யவுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு முதலில் பகலில் மட்டும் விமான சேவை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் அனைத்துலக தரத்திற்கு இணங்க, அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டிருக்கும் என்று சிறிலங்கா சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் சான்று அளிக்கப்பட்டுள்ளது.