மேலும்

மாதம்: October 2019

நாடாளுமன்றத் தேர்தலுக்கு மக்கள் ஆணை கோரும் மகிந்த, கோத்தா

நாடாளுமன்றத் தேர்தலை தாமதமின்றி நடத்துவதற்கான மக்கள் ஆணையை, அதிபர் தேர்தலில் வழங்குமாறு சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

500 பேர் தயாரித்த கோத்தாவின் தேர்தல் அறிக்கை – இன்று வெளியாகிறது

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று காலை வெளியிடப்படவுள்ளது.

முரண்பாடான சாட்சியம் – தெரிவுக்குழுவை தவறாக வழிநடத்த முயன்ற சிறிலங்கா அதிபர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக, இரண்டு விடயங்களில் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்து- சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவை  “வேண்டுமென்றே தவறாக வழிநடத்தியுள்ளார்” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இன்று மாலை கூடும் ஐந்து தமிழ்க் கட்சிகள்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, தீர்க்கமான முடிவை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக, ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று மாலை கொழும்பில் கூடி ஆராயவுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறன்று இந்திய தூதரகமும் இலக்கு

கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் அடிக்கடி வந்து செல்லும் விடுதி ஒன்றும், ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக, 21/4 தாக்குதல் குறித்து விசாரித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர் சஜித்துக்கு ஆதரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கரந்தெனிய தொகுதி அமைப்பாளரும், முன்னாள் மீள் குடியேற்ற அமைச்சருமான குணரத்ன வீரக்கோன், புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அரச புலனாய்வு சேவை தலைவரே முக்கிய பொறுப்பு – தெரிவுக்குழு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலை தடுப்பதற்குத் தவறியதில், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் நிலந்த ஜெயவர்த்தனவுக்கு பெரும் பங்கு இருப்பதாகவும், ஏனைய புலனாய்வுப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு செயலர், காவல்துறை மாஅதிபர்,  ஆகியோர் தமது பொறுப்புக்களில் தவறியுள்ளதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா?

தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.