மேலும்

நாள்: 23rd October 2019

சிறிலங்காவின் புதிய அரசுக்கு மனித உரிமை அழுத்தங்கள் தொடரும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் விவகாரம் குறித்து தொடர்ந்து அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மீண்டும் மருத்துவமனையில் மகேஸ் சேனநாயக்க – மாரடைப்பா?

தேசிய மக்கள் இயக்கத்தின் அதிபர் வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு கணிசமாக குறையும் – அமெரிக்கா

மோசமான மனித உரிமை மீறல் குற்றம்சாட்டுகளுக்கு உள்ளானவரை, இராணுவத் தளபதியாக நியமித்திருப்பது, சிறிலங்காவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் கணிசமாகக் குறைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான றொபேர்ட் டெஸ்ரோ தெரிவித்துள்ளார்.

தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் – அஸ்கிரிய மகாநாயக்கர் கடும் எதிர்ப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கில் உள்ள ஐந்து தமிழ் அரசியல் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள, 13 கோரிக்கைகளைக் கொண்ட ஆவணத்துக்கு, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொடசிறி ஞானரத்தன தேரர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

கோத்தாவை போட்டியிட முடியாமல் தடுக்கும் முயற்சி தோல்வி – பீரிஸ்

கோத்தாபய ராஜபக்சவை அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கின்ற முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக, பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.