மேலும்

நாள்: 13th October 2019

யாழ்ப்பாண விமான நிலைய திறப்பு விழா – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழாவை அரசியல்வாதிகள் தமது அரசியல் நலன்களை அடைவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

பலாலி ஓடுபாதையை ஆய்வு செய்ய வருகிறது இந்திய நிபுணர் குழு

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதையை பரிசீலனை செய்து, இந்திய அரசாங்கத்துக்கு இறுதி அறிக்கையைக் கொடுப்பதற்காக, இந்திய நிபுணர்கள் குழுவொன்று நாளை மறுநாள் பலாலிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

யாருக்கு ஆதரவு? – இதொகாவின் முடிவு இன்று

சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்த முடிவை, ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது.

காலியில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கிறது இந்திய நிறுவனம்

சிறிலங்காவில் கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை (Marine Rescue Coordination Centre (MRCC)  அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் ஒன்று பெற்றுள்ளது.

கோத்தாவுக்கு ஆதரவு- பிள்ளையான் கட்சி அறிவிப்பு

கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

பலாலிக்கு அனுப்பப்படும் 15 குடிவரவு திணைக்கள அதிகாரிகள்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தில் பணியாற்றுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் 15 பேர் பலாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

முன்னாள் புலி உறுப்பினர் வீட்டில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு – மூவர் கைது

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் தயார்

யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையத்தை வரும் 17ஆம் நாள் ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து கள வேலைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின்  பணிப்பாளர் நாயகம் எச்எம்சி நிமலசிறி தெரிவித்துள்ளார்.