மேலும்

மாதம்: October 2019

மைத்திரியுடன் சஜித் சந்திப்பு – சுதந்திரக் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சி

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று பின்னிரவு,  முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கோத்தாவா,  சஜித்தா? – சனியன்று சுதந்திரக் கட்சி முடிவு

வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

ஏஎஸ்பி லியனகேயும் அதிபர் தேர்தலில் களமிறங்குகிறார்

கட்டாருக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவரும், சிறிலங்கா தொழிற்கட்சியின்  தலைவருமான ஏஎஸ்பி லியனகேயும்  வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கோத்தாவின் வேட்புமனு நீதிமன்றத்தின் கையில் – வெள்ளியன்று முக்கிய உத்தரவு

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளையும், நாளை மறுநாளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

மூடிய அறை வாக்குறுதியின் அடிப்படையில் சஜித்துக்கு ஆதரவளிக்க முடியாது – சம்பந்தன்

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதற்கு, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் அபிலாசைகள் மற்றும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை நிறைவேற்ற அவர் என்ன செய்வார் என்பதை வெளிப்படுத்துமாறு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முடிவின்றி முடிந்தது சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.