மேலும்

மாதம்: October 2019

கோத்தாவின் குடியுரிமை – சவால் விடுத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்ரகுப்த தெனுவர ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

‘மக்கள் மேடை’யில் இருந்து ஓடி ஒளிந்த கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களை ஒரே மேடையில் – பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் மேடை எனப்படும், விவாத நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை.

போட்டியிட இன்று கடைசி வாய்ப்பு – நாளை வேட்புமனுத் தாக்கல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.

முடிவெடுக்கும் அதிகாரம் மைத்திரியிடம் – இன்று காலை அறிவிப்பார்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு  தீர்மானித்துள்ளது.

மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ்க் கட்சிகள் சந்திப்பு – பொது இணக்கத்துக்கு முயற்சி

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

சமல் கட்டுப்பணம் செலுத்தியது மாற்று ஏற்பாடு தான் – மகிந்த

சமல் ராஜபக்ச மாற்று ஏற்பாடாகத் தான் தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார் என, பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

நீதிமன்றை அவமதித்த கோத்தாவின் சட்டவாளர்கள் – கோபத்தை வெளிப்படுத்திய நீதியரசர்

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையைச் சவாலுக்குபட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அறிவித்த போது, நீதிமன்ற அறையில் இருந்த அவரது சட்டவாளர்கள் கைதட்டியும் பெரும் கூச்சல் எழுப்பியும் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர்.

வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய கோத்தா

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மாலை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பொதுஜன பெரமுனவினர் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கோத்தாவின் குடியுரிமைக்கு எதிரான மனு தள்ளுபடி

பொதுஜன பெரமுனவின் அதிபர்  வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை சிறிலங்கா குடிமகனாக ஏற்றுக் கொள்வதை தடுக்கும், உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி,  மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எந்த நேரமும் தீர்ப்பு வெளியாகலாம் – நீதிமன்ற வளாகத்தில் பெரும் பாதுகாப்பு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளிவரவுள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.