மேலும்

வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய கோத்தா

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமைக்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மாலை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பொதுஜன பெரமுனவினர் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நீதிமன்றத்துக்கு வெளியே கூடியிருந்த கட்சி ஆதரவாளர்கள் கோத்தாபய ராஜபக்சவின் படங்களுடன் வெடிகொளுத்தி கொண்டாடினர்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து, மகிந்த ராஜபக்சவின் செயலகத்துக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்ச அவருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

இதையடுத்து கோத்தாபய ராஜபக்ச நீதிமன்றத் தீர்ப்பின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினார்.

இதில், மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார, டக்ளஸ் தேவானந்தா, அதாவுல்லா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகபெரும, மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *