மேலும்

நாள்: 29th September 2019

அதிபர் தேர்தலில் போட்டி – ஜெனரல் மகேஸ் சேனநாயக்க அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

கோத்தாவின் குடியுரிமை செல்லுபடியானதா? – மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு

கோத்தாபய ராஜபக்சவின் சிறிலங்கா குடியுரிமையின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்தும், ரிட் மனுவொன்று, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் அமெரிக்க பயணத்தை ரத்து செய்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம், கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒக்ரோபர் 9, 10 இல் கோத்தா, சஜித்தின் பரப்புரைப் பேரணிகள் ஆரம்பம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மோதவுள்ள  சஜித் பிரேமதாசவும், கோத்தாபய ராஜபக்சவும், அடுத்த மாதம் கொழும்பு காலிமுகத்திடலிலும், அனுராதபுரவிலும் தமது பரப்புரைப் பேரணிகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

லெபனானில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சிறிலங்கா இராணுவ அணி

லெபனானில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், அடுத்தமாதம் முழுமையாக திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தாவின் இரட்டைக் குடியுரிமை ஆவணங்கள் இல்லை – கைவிரித்த அரச திணைக்களங்கள்

கோத்தாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சும், குடிவரவு குடியகல்வு திணைக்களமும் தெரிவித்ததாக, குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு சஜித் தூது – ஆதரவு பெற பேச்சுக்கு முயற்சி

வரும் அதிபர் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சு நடத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச,அழைப்பு விடுத்துள்ளார்.

கோத்தாவுக்கு எதிராக இரண்டாவது விருப்பு வாக்கு – ஜயம்பதி

அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையிலான ஐக்கிய இடதுசாரி முன்னணி, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தாபய ராஜபக்சவைத் தோற்கடிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளது.